Thanimai Kadhali Novels
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
Thanimai Kadhali
Admin
Posts : 1
Join date : 2023-09-19
Age : 23
Location : Perambalur
https://thanimaikadhali.forumotion.com

எனை தகிக்கும் காதல் தீயே ❤️  Empty எனை தகிக்கும் காதல் தீயே ❤️ 1

Tue Sep 19, 2023 1:59 pm
DISCLAIMER :
கதையில் வன்முறையும் முரண்பாடான காட்சிகள் அதீதமாக இருக்கலாம்..சில இடங்களில் வரும் காட்சிகள் உங்கள் மனதை பாதிக்குலாம்... கதைக்களம் பிடிக்காதவர்கள் கதையை தொடர வேண்டாம் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள்... நீங்கள் எதிர்பார்க்கும் மென்மை கதையில் இருக்காது.



இக்கதையில் டார்க் சைட் பற்றிய தகவலும் வரும். அதை மையமாக கொண்டு எழுத படும் கதை முகம் சுளிக்கும் காட்சிகளும் வர வாய்ப்புகள் உண்டு தயவு செய்து விருப்பம் இல்லாதவர்கள் இதோடு கதையை தொடர்வதை நிறுத்தி கொள்ளலாம்.

************* ************ ************

வடக்கு சென்டினல் தீவு.அந்தமானின் ஒரு பகுதி. உலகத்திலே அரசால் அங்கீகரிக்க படாத தீவில் இதுவும் ஒன்று. காரணம் அங்கு வாழும் சென்டினலீஸ் பழங்குடியினர். இன்னும் உலகின் செயற்க்கை வளர்ச்சிக்கு ஒன்றாமல் தங்கள் போக்கில் மொழியற்று வாழும் இவர்கள் மனிதர்களை கண்டாலே விரட்ட ஆரம்பித்து தீவை காத்து கொண்டிருக்கின்றனர்.

கொரானாவின் கோர தாண்டாவத்தில் உலகமே கதி கலங்கிய போது இந்த மனிதர்கள் எந்த பாதிப்பும் இல்லாததை கவனித்த இந்திய அரசாங்கம் உதவி செய்ய முன் வர அவர்களையும் ஈட்டி அம்பு வைத்து அடித்து துரத்தாத குறை தான்.

இப்படி உதவி செய்ய வருபவர்களையும் எதிரிகளாக நினைக்கும் இந்த பழங்குடி மக்கள் மாற்றவர்களுடன் நட்பு கொள்ள விரும்பவில்லை என்பதை அறிந்து அரசாங்கமும் அவர்களை தனித்து விட்டுவிட அதுவே லாபமாக்கி கொண்டான் கருப்பு உலகத்தின் தலைவன்.

அரசாங்கமே கண்டு மிரலும் இந்த பழங்குடி மக்களை தன் கண் ஆசைவில் ஆட்டி படைத்து அந்த தீவில் தனி சாம்பராஜ்யத்தையே நடத்தி கொண்டிருப்பதை அறிந்தவன் எவனும் இப்போது உயிரோடு இல்லை.

நள்ளிரவில் தீவின் கரையோரம் படகு ஒன்று வந்து நிற்க காவலுக்காகவே நிற்கும் பழங்குடி வேடத்தில் இருக்கும் ஆட்கள் கையில் ஆயுதத்தோடு வர படகை விட்டு இறங்கியவன் தோளில் ஒரு பெண் மயங்கி கிடந்தாள்.

அசுர கணக்கா உடம்பை வளர்த்தவனோ காவலுக்கு நிற்கும் ஆட்களுக்கு கண்ணை காட்டி விட்டு தீவிற்குள் நடக்க ஆரம்பித்தான் மயங்கிய பெண்ணை சுமந்து கொண்டு.



அவன் சென்று மறைந்ததும் மாறு வேடத்தில் இருந்தவர்கள் படகை வெளியே தெரியா வண்ணம் மறைத்து விட்டு அவர்களும் மறைந்து கொண்டு கழுகு போல் சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். சந்தேகப்படும் படி எவனாவது வந்தால் அவனுக்கு நிச்சயம் சங்கு தான்.



இரவில் பூச்சிகளின் சலசலப்பும் பாம்புகளின் சீரும் சத்தமும் அந்த காட்டையே அச்சுறுத்தியது.

சும்மா ஒருவனால் இந்த இடத்தில் வந்து விட்டு உயிரோடு திரும்புவது என்பது சுறா வாயில் சிக்கி கொண்டது போல. இரண்டுமே ரத்தம் பார்க்காது விடாது... தீவை சுற்றி பல மயில் தூரத்தை கண்காணிக்கவும் தீவிற்குள் கண்காணிக்கவும் தனி டிபார்ட்மென்ட்டே இங்க உள்ளது.



உலகத்தின் பார்வைக்கு தெரியாமல் வாழும் இவர்கள் கருப்பு உலகத்தின் வாசிகள். பசி கொண்ட இந்த காட்டு மிருகங்களிடம் சிக்கி கொண்டது ஒரு அப்பாவி மான்குட்டி. நான்கு சுவர்களுக்குள் கண்களும் கையும் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தவள் உடலில் வேர்வை சுரக்கும் ஈரத்தில் மெல்ல அசைந்தாள்.



அவளை அறைக்குள் அடைத்து வைத்ததில் இருந்து பிக் பாஸ் கேமரா போல் அறையை சுற்றி இருக்கும் மினி கேமராக்கள் பெண்ணின் முக பாவனையை பதித்து கொண்டது. உடல் அசைத்தவள் இப்போது முழுதாக மயக்கம் தெளிய கண்ணை திறக்க முடியாமல் இருட்டை கண்டவள் கதறினாள் பயத்தில்.



" யாரது.... நான் எங்க இருக்கேன்... ப்ளீஸ் யாராச்சும் என்ன காப்பாத்துங்க " ஆளில்லாத சுவரை பார்த்து கத்தியவளை பெரிய திரை வழியே பார்த்து கொண்டிருந்தான் ஒருவன்.



சிறு பெண் பயத்தில் நடுங்க ஆரம்பித்து விட்டாள். இரு கைகளும் பின்னே கட்ட பட்டதில் வேறு திமிறியவள் எவ்ளோ முயன்றும் கட்டை அவிழ்க்க முடியாமல் போகவே மெல்ல நடந்து அறையின் மூலையில் உடல் குறுக்கி அமர்ந்து விட்டாள் பாவை.



பெண்ணின் கதறலை தனி அறையில் அமர்ந்து முகத்தில் எந்த உணர்வும் இன்றி பார்த்து கொண்டிருந்தான் அவன். இந்த ஒட்டு மொத்த தீவையும் ஆட்சி செய்யும் அசுரன். தீட்சண்யம் கொண்ட கண்கள் பெண்ணை தான் அளவெடுத்தது.



சாதாரண காட்டன் சுடியை அணிந்திருந்தாள். துப்பட்டா போடாமல் தெரியும் முன்னழகை எந்த ஆணாக இருந்தாலும் ரசித்திருப்பார்கள்... ஆனால் இவன் அப்படி இல்லையே.... பார்வை அவளின் முகத்தில் பதிந்தது. கண்கள் மூட பட்டதால் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அவனால் ஏதோ ஒன்றை அவளை பார்க்கும் போது உணர முடிந்தது. அது பசி கொண்ட சிங்கத்திடம் மாட்டி கொண்ட மானின் முகம்.



உதடுகள் நடுங்க காலை மடக்கி மூலை ஓரம் அமர்ந்திருந்தாள் அவள். நெற்றியில் தோன்றிய வேர்வை வழிந்து நெஞ்சு குழியில் இறங்க மேல் மூச்சு வாங்கியவளை பாறை விழுங்கி பார்த்து கொண்டிருந்தவனின் அறைக்குள் அனுமதி கேட்டு வந்தான் விபின்.



" எல்லாம் ரெடி மோப்ஸ்டர்... ஆரம்பிக்குலாமா " தலைவனின் உத்தரவிற்காக காத்திருந்தான். உத்தரவு தர வேண்டியவனோ திரையில் தெரிந்தவளை உணர்ச்சி துடைத்து பார்த்தவன் ம்ம்ம் என்ற முத்து வார்த்தைகளை கொட்ட வந்த வேகத்திலே வெளியேறினான் விபின்.



மோப்ஸ்டர் என்ற வார்த்தை மாஃபியா தலைவர்களை குறிக்கும் பெயர்.

**************** *********** *************

தலைவன் குடுத்த உத்தரவில் அதிரடியாக அரண்ட போன அந்த அப்பாவி பெண் இருக்கும் அறைக்குள் நுழைந்தான் ஒருவன். இரண்டு ஆளுக்கு சமமான அவனின் திரண்ட புஜங்களும் பரந்த மார்புமே பார்ப்பவர்களை பயத்தில் எச்சில் விழுங்க செய்யும்.



ஏதோ ஆயிலை உடலில் பூசியவன் அண்டர்வியரும் முகத்தில் முகமூடி மட்டுமே அணிந்திருந்தான். கதவு திறந்த சத்தத்தில் நடுங்கி போன பெண்ணோ எவ்ளோ முடியுமோ அந்த அளவிற்கு மூலையில் ஒடுங்கி கொண்டாள் பயத்தில்.



" அய்யோ யாரு நீங்க... என்ன ஏன் கட்டி வச்சிருக்கீங்க... எனக்கு பயமா இருக்கு ப்ளீஸ் விட்ருங்க " கதறியவனை காம பசியில் பார்த்தவனுக்கோ பார்வையே அவளை புசிக்க ஆரம்பித்து விட பெண்மை உணர்ந்து கொண்டதோ நெஞ்சை மறைக்க போராடியவளை திரை மூலம் பார்த்து கொண்டு தான் இருந்தான் தலைவன்.



லைவ்விலும் அந்த அறையில் நடக்கும் காட்சிகள் ஓட உலகத்தில் இருக்கும் நல்ல முக மூடி போட்ட காம கொடூரர்கலும் நாக்கை தொங்க போட்டு நடக்கும் கொடூரத்தை இரக்கமே இல்லாமல் ஆர்வமாக பார்க்க மூலையில் இருந்தவளின் முடியை கொத்தாக பிடித்து தூக்கி நிறுத்தினான் கொடூரன்.

பேதை வலி தாங்க முடியாமல் அழுவது கூட பார்க்கும் மனித மிருகங்ககளுக்கு போதையை தந்தது போல. கொஞ்சம் கொஞ்சமாக வியூஸ் மில்லியனை தாண்ட வழக்கமாக செய்ய வேண்டியதை செய்ய ஆரம்பித்தான் அந்த முகமூடிகாரன்.



இந்த கருப்பு உலகத்தில் இவர்கள் செய்யும் வேலையில் இதுவும் ஒன்று. லைவ் காலில் ஒரு பெண்ணை வைத்து சாட்டில் பார்வையாளர்களின் வேண்டுகோளை இந்த முகமூடிகாரன் பாரபட்சம் பார்க்காமல் நிறைவேற்றி பார்ப்பான்... இதற்கு கோடி கோடியாக பணத்தை கொட்டும் இந்த மனித பிசாசுககளுக்கு எப்போது தான் அழிவு வருமோ.



பெண் என்றால் எதாவது ஒரு பெண் அல்ல... தனக்கு இவள் இப்டி ஒரு அநீதியை செய்து விட்டாள்... அவளை பழி வாங்க வேண்டும்... இப்படி ஒரு கோரிக்கையில் வருபவனின் காரணம் சரியாக இருந்தால் மட்டுமே அந்த பெண்ணை கடத்தி வந்து அவன் விருப்பட்டது போல் சித்ரவதையை சேவகம் போல் செய்து வருகின்றனர்.



இதற்கு எல்லாம் தலைமை தான் அந்த மோப்ஸ்டர். நடக்கும் அனைத்தையும் இரும்பு மனதோடு பார்ப்பவனுக்கு இதயமே இல்லை போல.



இன்று இந்த அப்பாவி பெண்ணும் ஒருத்தனின் கோரிக்கையில் சிக்கி கொண்டவள் தான். இவளை எவன் பழிவாங்க நினைத்தானோ அவன் விருப்ப படி சித்ரவதை செய்வதை மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள். அதற்கும் லட்ச கணக்கில் பணம் கட்ட வேண்டும்.



" என்ன விட்ருங்க... எனக்கு பயமா இருக்கு... தயவு செய்து என்ன எதும் பண்ணிராதீங்க அண்ணா " முன்னால் இருப்பவன் யாரென தெரியாமல் கூட கெஞ்ச காம பசியில் இருந்தவனோ பெண்ணின் ஆடையை கிழிக்க அவனின் நகத்தில் பெண்ணின் மேனியும் கிழிந்தது.கண் மூடிய நிலையில் கதறி அழுதவள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவை இழந்தாள். பெண்ணின் கதறலை கூட காதில் வாங்காது மார்பை மறைத்த ஆடையை கிழிக்க முயன்றவனின் கை உறைந்து நின்றது காதில் கேட்ட " ஸ்டாப் இட் " சிங்கத்தின் கர்ஜினையில் அந்த முகமூடி காரனே ஒரு கணம் நடுங்கி விட்டான் எமனின் வருகையில் .



இன்னும் முகமூடி காரன் அப்பாவி பெண்ணின் ஆடையில் கையை வைத்திருப்பதை அனல் கக்கும் பார்வையில் பார்த்த தலைவனோ " அவ மேல இருந்து கையை எடுக்குறியா இல்ல " மோப்ஸ்டரின் அழுத்தமான வார்த்தையில் எச்சில் விழுங்கியவன் அறையின் ஓரமாக நின்று கொள்ள அதீத பயத்தில் மயங்கி விழுந்தவளை மாறா பார்வையோடு பார்த்தவன் " விபின் " அழைத்த அடுத்த நொடி ஓடி வந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்த மோப்ஸ்டர் " யாரு இவள தூக்கிட்டு வந்தது... அவனோட தலை இன்னும் அஞ்சு நிமிஷத்துல என் காலடியில இருக்கனும்... கொடுத்த வேலையை சரியா செய்யாத எந்த நாயும் இந்த அக்னித்ரன் சர்வஜித் கோட்டைக்குள்ள உயிரோட இருக்க கூட தகுதி இல்ல... போ நான் சொன்னதை முடிச்சிட்டு வா " விபினை விரட்டி விட்ட அக்னி மூலையில் நின்றவனை ஒரு பார்வை தான் பார்த்திருப்பான் மரண பீதியில் அங்கிருந்து ஓடி விட மயங்கியவளை தூக்கி கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான் மோப்ஸ்டர் என கருப்பு உலகத்தால் அழைக்கப்படும் அக்னித்ரன் சர்வஜித்.

**************** ************ **********

யார் இந்த பெண்... இவள் எப்படி இந்த கொடூர கூட்டத்தில் மாட்டி கொண்டாள். அக்னித்ரன் உண்மையில் நல்லவனா கெட்டவனா?
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum